Tea Cash Online Job
தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்
என்ன தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது என்றுப் பார்க்கிறீர்களா! வித்தியாசம் இல்லை, உண்மை.
இதுவரை மாதம் எப்பொழுது பிறக்கும் பணம் வரும், வாரம் எப்பொழுது பிறக்கும் பணம் வரும் ... என்று இவ்வளவு பணம் சம்பாதித்து பணத்தினை எடுப்பது என்ற ஆன்லைன் ஜாப் தளங்களைத்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், இன்று நான் உங்களுக்கு அறிமுகம் செய்யும் தளம், தினம் தினம் பணம் கொடுக்கும், அதுவும் ரூ.25 இருந்தாலே பணத்தினை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கலாம்.
பாக்கெட்டில் போட்டுக்கலாம் என்றால், உங்களது டெபிட் கார்டு எப்பொழுதும் பாக்கெட்டில் தானே இருக்கிறது, அந்த டெபிக் கார்டுக்கு உங்களது பணம் ஒரே நாளில் வந்து சேர்ந்துவிடும் என்பதுதான். ஆகையால், இது ஒர் கப்சா/ரீல் என நினைக்காதீர்கள், உண்மை. ரூ.25 வந்ததும் கேஸ் அவுட் கொடுத்தால் ஒர் சில மணி நேரங்களில், உங்களது ஆன்லைன் வங்கிக்கு வந்துவிடும், அங்கு வந்த ஒரே நாளில் உங்கள் லோக்கல் பேங்கிற்கு பணம் வந்துவிடும்... பின் நீங்கள் டெபிட் கார்டு வழியாக பணத்தினைப் பயன்படுத்தி டீ சாப்பிடலாம். என்னும் கொஞ்சம் சுமார்ட்டாக பணியினைச் செய்தால், மாலை டீ மட்டும் அல்ல, இரவு பிரியாணியும் சேர்த்தே வாங்கிச் சாப்பிடலாம்... அவ்வளவு பணத்தினை உங்களால் சம்பாதிக்க முடியும்.
எல்லோரும் வேலை என்ன என்பதனைவிட பணம் எப்படி சார் கிடைக்கும் எனக் கேட்பதனால் முதலில் வேலை என்ன எனச் சொல்லாமல், பணத்தினைச் சொல்லிவிட்டேன். இப்போ வேலையைச் சொல்லுகிறேன்.
இப்பணித் தளத்தில் நீங்கள் இலவசமாகவே சேர்ந்து கொள்ளலாம்.
சேர்ந்த அடுத்த நொடியே உங்களது பணியினைச் செய்ய ஆரம்பிக்கலாம்.
பணிகள் எளிமையான யெஸ் ஆர் நோ கொஸ்டீன் டைப், கொடுக்கப்பட்டதனை சரி பார்த்துச் சொல்லுதல், சில தளங்களில் உள்ள விலை பட்டியலைப் பார்த்து என்ன விலை எனக் கொடுத்தல், பேஸ் ப்ரொபைல் பேஜ் இவருடையதுதான எனச் சரி பார்த்தல் என சின்னச் சின்ன பணிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
இப்படி ஒர் டிக்கு போடுறதுக்கு அல்லது அன்சர் கொடுப்பதற்கு 1 செண்ட் முதல் 15 செண்ட் வரை பணம் கொடுப்பார்கள்.
டிக் போடுறதுக்கு நமக்கு கஷ்டமா என்ன ... 10 நிமிடத்தில் 1000 டிக் போட்டுவிடலாம். ஆனால், சரியான விடையாக பார்த்து டிக் செய்ய வேண்டும். ஆகையால், 1 மணி நேரத்தில் நம்மால் 100 டிக் வரை செய்ய முடியலாம். ஆகையால் ஒர் மணி நேரத்தில் 1 டாலர் முதல் 15 டாலர் வரைச் சம்பாதிக்க முடியும்... சில நேரம் நமக்குத் தெரிந்த ... அதாவது நேற்று இதே பணியினைச் செய்திருந்தால், இன்று கொஞ்சம் விரைவாகச் செய்யலாம்.. இப்படி நாம் தொடர்ந்து செய்வதன் மூலம் என்னும் அதி வேகமாக நம்மால் செய்ய முடியும்... ஒர் சிலர் இப்பணியின் மூலம் தினம் 50 டாலர் முதல் 100 டாலர் வரை சம்பாதிக்கிறார்கள்.... நானும் அவர்களைப் போல் தினம் சம்பாதிக்கவே தினம் தினம் கற்றுக் கொண்டு வருகிறேன். பின்னே தெரியாமல் வேலை செய்ய முடியுமா? தெரிந்தால் தானே சரியாகச் செய்து நிறைய சம்பாதிக்க முடியும்.
சில நேரம் இப்பணிகளுக்கு 1 டாலர் பேமண்ட் கூட கொடுப்பார்கள், அப்படியான நேரத்தில் 10 நிமிடத்தில் 10 டாலர் சம்பாதித்துவிடலாம். இப்படியான ஜாப் பெரும்பாலும் இரவு 2 மணிக்கு மேல் தான் அப்டேட் ஆகின்றன என்பது எனது அனுபவம்... மேலும் இதற்கான காரணம், அமெரிக்காவிலிருந்து பணி வழங்கும் இக்கம்பெனி வேலை நேரம் அது. அவர்கள் இப்பணிக்கான பார்மெட்டினைச் செட் செய்து சப்மிட் செய்த கொஞ்ச நேரத்திலேயே உலகம் முழுவதிலிருந்து ஒவ்வொருவரும் பணியினைச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.... ஆகையால் முதலில் அதிக பேமண்ட் கொடுக்கும் பணியினை எல்லோரும் விரும்புவதால்.... நாம் காலையில் செய்யலாம் எனப் பார்த்தால் அதிக வருவாய் கொடுக்கும் பணி முடிந்து, சின்ன சின்ன பேமண்ட் ஜாப் தான் இருக்கும். அப்படி இருப்பதனை, கிடைக்கும் நேரத்தில் செய்து சம்பாதித்துக் கொள்ள வேண்டியதுதான். இப்படி நான் ஒர் நாள் அதிர்ஷ்ட வசமாக திடீரென இரவு 1 மணி தூக்கம் வராமல் ஆன்லைனுக்குள் வந்த பொழுது எளிமையான யெஸ்/நோ டிக் ஜாப்பிற்கு 10 செண்ட் கொடுத்திருந்தார்கள், விரைவாக படத்தினைப் பார்த்து டிக் செய்து 4 மணி நேரத்தில் முடித்து பார்த்தால் 42 டாலர் என் கணக்கில் இருந்தது.. 42 டாலர் *52ரூபாய் = 2100 ரூபாய் 4 மணி நேரத்தில் சம்பாதித்துவிட்டேன்.
கிடைக்கும் நேரத்தில், கிடைக்கும் பணியினை, விரும்பும் அளவுக்கு செய்து கொள்ளலாம் என்பதால், அலுவலக கணிணியின் வாயிலாகக் கூட ஒர் 10 நிமிடம், 30 நிமிடம் என லாக்கின் ஆகி, அதிகாரிகளுக்குத் தெரியாமலும் செய்து மாலை டீக்காசுக்கு அல்லது இரவு பிரியாணிக்கோ சம்பாதித்துக் கொள்ளலாம்.
அதென்ன யெஸ் / நோ கொஸ்டின் என்று கேட்கக் தோன்றுகிறதா???
சரி, இப்ப கொஞ்ச யோசிங்க... நீங்க கூகுளில் தேடும் பொழுது "rajini photo" எனக் கொடுத்தால் எப்படி சரியான ரஜினி போட்டோக்களை மட்டும் கொடுக்க முடிகிறது???
girl photo எனத் தேடினால் எப்படி, பாய்ஸ் போட்டோ இல்லாமல் பெண்கள் போட்டோவினை மட்டும் எப்படி கொடுக்க முடிகிறது???
இந்த வொர்க்கைத்தான் இப்போ நீங்க அந்த YES / No ஜாப்பில் செய்யப் போறிங்க, அதாவது சில நேரம் ஒர் போட்டோவினைக் கொடுத்து, இது பூனையா என்று கேட்பார்கள், நாம் ஆம், இல்லை என டிக் கொடுத்தால் போதும்.
அப்புறம் என்னொரு உதாரணம், கீழ் கொடுக்கப்பட்ட லிங்க் "Feelings Cafe" என்பதன் Official Website தானா? எனக் கேட்பார்கள், Link > http://www.feelingscafe.com/
நீங்கள் அந்த லிங்க கிளிக் செய்து பார்த்து, அந்த தளத்தில் சரியாக அதே பெயரில் வலைத்தளம் இருந்தால் ஆமாம், எனக் கொடுத்தால் போதும்.
சில Link > http://www.yelp.com/biz/feelings-cafe-new-orleans
இப்படி Classifieds தளத்தின் லிங்காக இருக்கும். அப்படியானால், இல்லை... இது Business Directory Website என்பதில் டிக் செய்துவிட வேண்டும்.
இப்பணிகள் நமக்கு எளிது, அவர்களுக்கு மிக முக்கியம். கூகுளேயே எடுத்துக் கொள்ளுங்கள். பாய்ஸ் போட்டோன்னு தேடி அதுல 10 பாய்ஸ் போட்டோவும், நாலு பூனை போட்டோ, 2 எருமை போட்டோ என வந்தால் உங்களுக்கு எப்படி கடுப்பாக இருக்கும்???
அப்படி கடுப்பு ஏற்றி வாசகர்களை விரட்டாமல், சரியான விடையினைக் கொடுத்து தக்க வைத்துக் கொண்டால் தான், கூகுள் சர்ச் என்றும் முதல் இடத்தில் இருக்கும்... அப்படி முதல் இடத்தில் இருப்பதனால் தான் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி மில்லியன் கோடி டாலாராக சம்பாதிக்கும் பணத்தினை, இப்படி செண்ட் கணக்கில் நமக்கு கொடுத்து பணியினை எளிமையாக முடித்துக் கொள்கிறார்கள். மேலும், இப்படியான பணிகளை எல்லாம் ஆபிஸ் போட்டு 1000 பேரை வைத்து செய்தால் 1 மாதம் ஆகும். அதே ஆன்லைனில் ப்ராஜக்ட்டாக கொடுத்தால் 1 இலட்சம் பேர் சேர்ந்து ஒரே நாளில் முடித்துவிடலாம். அதுவும், பெரிய தளமான கூகுளில் வொர்க் லோடு அதிகமாக உள்ளதால்... அதுவும் தினமும் இலட்சக்கணக்கான தளங்களில் போட்டோக்கள், வலைப்பதிவுகள் என அப்லோடிங்க் ஆவதால், அவற்றினை Bot மூலம் டவுன்லோடிங்க் செய்து, Staff மூலம் அவற்றினை மொத்தம் மொத்தமாக ஒழுங்குப்படுத்தி, நம்மை வைத்து ஒவ்வொன்றாக சரி பார்த்துக் கொள்கிறார்கள்.
இது கூகுளுக்கு மட்டும் நான் சொன்ன உதாரணம்.. இதைப் போல் Ebay என்ற ஒர் பெரிய கம்பெனி இருக்கு, amazon என்றொரு பெரிய கம்பெனி இருக்கு... என்னும் நமக்குத் தெரியாத பல கம்பெனிகள் இருக்கு, இவர்களிடமிருந்து எல்லாம் நமக்குத் தெரிந்த, விப்ரோ, இன்போஸிஸ் போன்ற கம்பெனிகள் ஜாப் ஆர்டர் எடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாட்களை வைத்து செய்வது போல்.... நாம் செய்ய இருக்கும் இந்த பெரிய அமெரிக்க கம்பெனி ஆன்லைன் வழியாக குறைந்த செலவில், மிக விரைவாக இலட்சக்கணக்கான நபர்களை வைத்து முடித்துக் கொடுக்கிறது..
மொத்தத்தில் வேலையும் உறுதி... பணமும் உறுதி ..
மிகவும் நம்பிக்கையுடன் செய்யலாம்... நானும் நேற்றுத்தான் சேர்ந்தேன் ... நேற்றே ஒர் பேமண்ட், இன்று ஒர் பேமண்ட் என இரண்டு டீக்காசுகளைச் சம்பாதித்துவிட்டேன். இப்பவும் ஜாப் இருக்கு, ஆனால் எனக்கு அது தெரியாததால், அடுத்த ப்ராஜக்ட் அப்டேட் செய்யும் வரை காத்திருக்கிறேன்... அதாவது ஒவ்வொரு நாளும் புதிய பணிகள் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும்... அதில் ஒவ்வொரு வாரமும், பழைய பணிகள் என திரும்ப திரும்ப வரும்... அப்படி திரும்பத் திரும்ப செய்யும் பொழுது நாம் ஆரம்பத்தில் செய்யும் பொழுது தவறுகளாகச் செய்து நன்றாக கற்றுக் கொண்டிருபதால், அடுத்து வரும் பொழுது அந்த தவறுகளைத் திருத்தி சரியானதாகச் செய்து நிறையச் சம்பாதிக்கலாம். அதுவும் நம்மூர்ல நிறைய பேர், தவறாக செய்திருக்க, அதனால் காசு கிடையாது எனச் சொல்லி நாம் சரியாகச் செய்ததையும் நிராகரிப்பது என்பது போல் அல்லாமல், நீங்கள் எவ்வளவு சரியாகச் செய்திருக்கிறீர்களோ அவ்வளவு பணம், 100/க்கு 10 மார்க் எடுப்பது போல, 10000 ஜாப்பில் உங்களால் 10 சரியாக செய்ய முடிந்தால் அந்த ஒவ்வொன்றுக்குமான பணம், உடனுக்கு உடன் ஒவ்வொன்றாகச் செய்ய நம் கணக்கில் அப்டேட் ஆகிவிடும்.
அப்படித்தான், நான் என்னால் முடிந்த அளவுக்கு சரியாகச் செய்து நேற்றும், இன்றும் பணம் வாங்கிக் கொண்டேன். ஆகையால் 25 ரூபாய் தான் சம்பாதிக்க முடியும் என்று அல்ல, உங்களால் முடிந்தால் 1000 ரூபாய் கூட சம்பாதித்துக் கொள்ள முடியும், அவ்ள ஜாப் இருக்கு, நாம் சரியாகச் செய்து கொடுத்து பணத்தினை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
இவ்வளவு சொன்னேனே... அந்த ஜாப் எங்க இருக்கு என்று சொன்னேனா???
பணி இருக்கும் இடம் > http://padugai.com/genuinejobs/onlinejob6.html
Earn Cash என்ற மெனுவுக்குள் TASKS என்பதற்குள் இருக்கிறது.
Get quotes for airfares from Ryanair website
Task Example :
இத்தளத்தில் பல டாஸ்க் கொடுத்தாலும், மிகவும் எளிதான Get Quotes for Airfares (விமான டிக்கெட் விலை) from Ryanair website என்றப் பணி வாரம் ஒர்முறை என ஒவ்வொரு வாரமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதால், இப்பணி எப்படிச் செய்வது என்பதனை ஒர் விடியோவாக எடுத்தே கொடுத்துள்ளேன்... இவ்விடியோவினைப் பார்த்து செய்யக் கற்றுக் கொண்டு செய்ய ஆரம்பித்தால் வாரம் ஆயிரம் ரூபாய் டீக்காசு சம்பாதித்துவிடலாம். சண்டே வந்திச்சின்னா ஜாலியாக செலவு செய்யலாம்.
0 comments:
Post a Comment