AD (728x90)

Thursday, October 17, 2013

Forex trading tamil

Share it Please
Image

இரண்டாம் பாகத்தில் ஆர்டர் போடுவதற்கு முன், முதலில் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தோம்... இப்பொழுது ஆர்டர் எப்படிப் போடுவது, இலாபத்துடன் எப்படி க்ளோஸ் செய்வது என்பதனைப் பார்ப்போம்.

முதலில் படத்தினைப் பாருங்கள், அடுத்து விடியோவினைப் பாருங்கள். படத்தின் படி, ஒவ்வொரு ஸ்டெப்பாக கீழே விளக்கமாக சொல்லியிருக்கிறேன்.. அதனை முழுமையாகப் படித்துவிட்டு, உங்களது டொமோ ட்ரேடிங்க் அக்கவுண்டிற்குள் லாக்கின் ஆகி, இப்பவே செய்து பாருங்கள். ஏதேனும் சந்தேகம் எனில் போன் செய்யுங்கள், அல்லது இங்கு பின்னூட்டம் கொடுங்கள்.

டொமோ அக்கவுண்ட் என்னும் ஒபன் செய்யவில்லை என்றால், www.tamilforex.in என்ற தளத்திற்கு சென்று ஒர் டொமோ அக்கவுண்ட் ஒன்று தொடங்கிக் கொள்ளுங்கள்.




How to Create New Order & Close with PROFIT in Forex Trading?

முதல் இருக்கும் படத்தினைப் பாருங்கள். சரி, இப்பொழுது உங்களது டொமோ அக்கவுண்ட் ஐடி பாஸ்வேர்டு கொண்டு, ஃப்ரக்ஸ் ட்ரேடிங்க் சர்வர்க்குள் லாக்கின் ஆகுங்கள்... இப்பொழுது படத்தினைப் பாருங்கள்... இரண்டும் ஒன்றாக இருக்கிறதா?? சரி, இப்போ ஸ்டெப் பை ஸ்டெப்பாக என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன், கவனமாக படித்துக் கொள்ளுங்கள்.

1. முதலில் EUR/USD என்ற கரன்சி தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

2. ஆர்டர் சைசினை 0.1 என்ற சிறிய அளவிற்கு செட் செய்யுங்கள். உங்கள் கணக்கில் 1000 டாலர் இருந்தால் 0.2 என்ற சைஸ் ஆர்டர் போடலாம். ($500=01, 1500 = 0.3 என நமது பேலன்ஸ்க்கு தகுந்தவாறு ஆர்டர் சைஸ் செட் செய்து கொள்ளுங்கள். 0.1 சைஸ் ஆர்டர் என்றால் ஒர் பைப்பிற்கு 1 டாலர் கிடைக்கும்.... 0.2 என்றால் ஒர் பைப்பிற்கு 2 டாலர் கிடைக்கும்... பிராபிட் அதிகம் வேண்டும் என்பதற்காக, பேலன்ஸ் குறைவாக வைத்துக் கொண்டு, பெரிய சைஸ் ஆர்டர் போடாதீர்கள், ஏனெனில் ஒர் பைப்பிற்கு எவ்வளவு அதிகமாக இலாபம் கிடைக்குமோ, அதைப்போல் நெகட்டிவ்வாக சென்றால் நட்டமும் கிடைக்கும். ஆகையால் எப்பொழுது சிறிய சைஸ் ஆர்டரையே செட் செய்யுங்கள்.

3. மேலிருக்கும் மவுஸ் பட்டனைக் கிளிக் செய்து, ஒன் கிளிக் ஆர்டர் செட்டப்பினை AGREE கொடுத்து ஒகே செய்யுங்கள்.

4. மார்கெட் இப்பொழுது என்னப் பாயிண்ட்/விலை சென்று கொண்டிருக்கிறது எனப் பாருங்கள்.

5. மார்கெட் நிலவரத்தினை 1 minute chart, 5 minute chart, 30 minute chart எனப் பார்த்து, இப்பொழுது மேல் சென்றுவிட்டு கீழ் இறங்குகிறதா? கீழ் சென்றுவிட்டு மேல் ஏறுகிறதா? என்பதனை தெளிவாக அனலைசிங்க் செய்யுங்கள். மார்க்கெட் செல்லும் திசையினை ஒர் 30 நிமிடம் வாட்ச் செய்யுங்கள், பின்னர் என்ன ஆர்டர், எந்தப் பாயிண்டில் போடலாம் என முடிவு செய்யுங்கள்.

6. மார்கெட்டினை வாட்ச் செய்து, சார்ட் அனலைசிங்க் செய்து, பை/செல் என ஏதேனும் ப்ராபிட் கொடுக்கும் ஆப்சனைத் தேர்வு செய்துவிட்டீர்கள் அல்லவா?, இப்போ நடுவில் இருக்கும் BUY / SELL என்பதில் நீங்கள் தேர்வு செய்த பையோ அல்லது செல்லோ... நீங்கள் எதிர்பார்க்கும் பாயிண்ட் வந்ததும் ஒர் கிளிக் செய்து ஆர்டரைப் புக் செய்யுங்கள்.

7. ஆர்டர்/டீல் ஆப்சனை க்ளிக் செய்ததும், ஆர்டர் புக் ஆகி, OPEN POSITION என சார்ட்டுக்குக் கீழே காண்பிக்கப்படும். அதில் ஆர்டர் விவரம் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் EUR/USD என இருக்கும் கரன்சி மேல் ஒர் டபுள் கிளிக் செய்யுங்கள்... திறக்கும் புதிய சிறிய விண்டோவில் வலப்பக்கம் இருக்கும் Take Profit என்னும் ஆப்சன் பாக்சில் ஒர் டிக் கொடுத்து, எத்தனை பைப் ப்ராபிட் எதிர்பார்க்கிறீர்களோ, அல்லது எந்தப் பாயிண்ட் வரை ஆர்டர் இலாபத்துடன் வரும் என எதிர்பார்க்கிறீர்களோ அதுவரைக்கும் கொடுத்து அப்டேட் செய்யுங்கள்.

நீங்கள் பாயிண்ட் கொடுக்கும் பொழுதே கீழே, அந்தப் பாயிண்ட்க்கு எவ்வளவு டாலர் இலாபம் கிடைக்கும் என கீழே ஓடிக் கொண்டே இருக்கும்.. அதனைப் பார்த்து ஓகேன்னதும் அப்டேட் செய்யாமல்... இத்தனைப் பைப் தான் வரும்... அந்த பைப் வரைக்கும், என்ன இலாபமோ அது போதும் என, 5 பைப் ... 10 பைப் என குறைந்த இலாபத்தில்.. ஆர்டரை இலாபத்துடன் செட் செய்து கொள்ளுங்கள்... பின் நல்ல அனுபவத்திற்குப் பின் கூடுதல் பைப் இலாபம் பார்க்கலாம்.

Take Profit என்று செட் செய்வது போல, இடப் பக்கம் இருக்கும் STOP LOSS என்பதன் மூலம், நெகட்டிவ்வாக மார்கெட் செல்லும் பற்றத்தில், இந்த பாயிண்ட்க்கு மேல் போனால் ஆர்டரை க்ளோஸ் செய்துவிடலாம் எனவும் செட் செய்து வைக்கலாம்.

டேக் ப்ராபிட்/ ஸ்டாப் லாஸ் ஆகியவற்றினை டெமோ அக்கவுண்ட் கொண்டே நன்றாகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்... இவற்றினைப் பற்றி மேலும் விவரமாக அடுத்து வரும் பாகங்களில் பார்க்கலாம் இப்போதைக்கு ஆர்டர் போடுவது, டேக் ப்ராபிட் என ஒர் 5 பைப் செட் செய்வது என்பதனை கற்றுக் கொள்ளுங்கள்.

8. டேக் பிராபிட் என்பதனை அப்டேட் செய்தவுடன், பார்த்தால் கீழ் ஆர்டர் பொசிசனில் எல்லாம் செட் ஆகியிருக்கும்... ஸ்டாப் லாஸ் கொடுத்திருந்தால், S/L என்ற இடத்தில் அது எந்த பாயிண்டோ அது காண்பிக்கும், அதைப்போள் T/P (take profit) பாயிண்டும் தெரியும்... ஒர் வேளை மார்கெட் மூவ்மெண்ட்க்கு தகுந்தவாறு இப்பாயிண்டுகளை மாற்றியமைக்க விரும்பினால் மீண்டும் டபுள் கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம். அந்த சிறிய விண்டோவில் பாயிண்ட் சரியாக கொடுத்துவிட்டு, அப்டேட் எனக் கொடுக்க வேண்டுமே தவிர, CLOSE எனக் கொடுத்துவிடாதீர்கள், ஆர்டர் அந்த இடத்தில் நட்டம்/இலாபம்.... எதுவோ அதுவாக க்ளோஸ் ஆகிவிடும்... ஆகையால் கவனமாக செய்யுங்கள்.

9. ஆர்டர் மார்கெட் நிலவரத்திற்கு தகுந்தவாறு இலாபம் நட்டம் என Profit என்னும் இடத்தில் தெரிந்து கொண்டே இருக்கும்... எப்பொழுது சிகப்பு மாறி/மைனஸ் மாறி பச்சைக்கலரில் இலாபத்துடன் காண்பிக்கிறதோ, அப்பொழுது நீங்கள் விரும்பினால், அதே லைனில் இடப்பக்கம் இருக்கும் CLOSE என்றப் பட்டனை கிளிக் செய்து ஆர்டரை க்ளோஸ் செய்து கொள்ளலாம். இல்லாவிடில், அப்டேட் செய்துள்ள S/L & T/P என்ற பாயிண்டில் எந்தப் பாயிண்ட் முதலில் வருகிறதோ, அந்தப் பாயிண்டில் க்ளோஸ் ஆகிவிடும்... அதாவது ப்ராபிட் பாயிண்டிற்கு சென்றால் ப்ராபிட்டாகவும், லாஸ் பாயிண்டினைத் தொட்டால் லாஸ் ஆகவும் ஆர்டர் தானாகவே க்ளோஸ் ஆகிவிடும்.

எந்தவொரு பாயிண்டும் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் தான் பார்த்து ஆர்டரை க்ளோஸ் செய்ய வேண்டும்... இல்லை அப்படியே விட்டுவிட்டீர்கள் என்றால்.... ஆர்டர் ஓடிக் கொண்டே இருக்கும்.... ப்ராபிட் என்றால் பிரச்சனை இல்லை எவ்வளவு பைப் சென்றாலும் ஓடிக் கொண்டே இருக்கும்.. நெகட்டிவ் பைப்பாக சென்றால்... நம் கணக்கில் பேலன்ஸ் இருக்கும் வரைக்கும் தான் ஓடும்... அதாவது 100 டாலர் பேலன்ஸ் வைத்துள்ளீர்கள், எனில் 100 டாலர் நஷ்டம் என்றால், அத்தோடு ஆர்டரும் க்ளோஸ் ஆகிவிடும்... அதுவே 1000 டாலர் ப்ராபிட் என்றால், அதுபாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும்... நீங்கள் வந்து க்ளோஸ் செய்து கொள்ள வேண்டியதுதான்...

10. மார்கெட் மேலும் கீழுமாக செல்வதால், ப்ராபிட் சென்றது என்றால் அடுத்து நஷ்டத்திற்கு திரும்பி ஓடும்... ஆகையால், 5 பைப் இலாபத்தினைப் பார்த்து உடனே க்ளோஸ் செய்யுங்கள். கொஞ்சம் அனுபவம் வந்தப் பின்னர், 10 பைப்... 20 பைப்...50 பைப் என ஒர் நாளைக்கு இலாபம் பார்க்கலாம்.


இப்போ, உங்களுக்கு ஆர்டர் எப்படி போடுவது, ஆர்டரை எப்படி ஆட்டோமெட்டிக்காக Execute செய்ய ஸ்டாப் லாஸ், டேக் ப்ராபிட் பாயிண்ட் கொடுப்பது, ஆர்டர் இலாபம் வந்தவுடன், எப்படி நாமே க்ளோஸ் செய்வது என எல்லாம் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.. இவற்றினை அப்படியே டெமோ அக்கவுண்டில் செய்து பாருங்கள்...

ஏதேனும் சந்தேகம் எனில் எனக்கு தொடர்பு கொள்ளலாம்..

டெமோ அக்கவுண்ட் ஓபன் செய்யாதவர்கள், இலவசமாக ஒர் டெமோ அக்கவுண்டினை நமது www.tamilforex.in என்ற வலைத்தளம் வழியாகச் சென்று ஓபன் செய்து கொள்ளுங்கள்.


நாளை அடுத்தப் பாகத்தோடு சந்திக்கிறேன் ... நன்றி

Written by

0 comments:

Post a Comment

© 2013 Forex. All rights resevered. Designed by Templateism