மிகவும் எளிதான கேப்சா டேட்டா எண்ட்ரி வேலை
பெரிய பூமியை கைக்குள் அடங்கும் அளவிற்கு சிறியதாக்கிய இணையத்தினால், ஆசை என்னும் வானத்தினை சிறியதாக்க முடியவில்லை.
அதிக விளக்கங்களைப் படிக்க விரும்பவில்லை எனில், நேரடியாக கீழ் உள்ள படத்தினை கிளிக் செய்து, Data Entry வேலையை உடனே இலவசமாக ஆரம்பிக்கலாம்.
CLICK the above IMAGE AND READ IN ENGLISH
ஒர் எளிமையான வேலை வாய்ப்பிற்கான தலைப்பினைக் கொடுத்துவிட்டு, ஆரம்பமே புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறானே என்று கொஞ்சம் கொஞ்சம் கடுப்பாக இருக்கிறதா? வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருந்து எனது இந்த முழு ஆர்ட்டிகளையும் படித்துவிட்டு, உங்களது Data Entry வேலையினை தொடங்குங்கள்.
இணையத்தில் அதிகமாகப் தேடுப்படும் பணிகளில் ஒன்று, Data Entry Work. அப்படியான வேலை நமது படுகை.காம் வழங்குவது இல்லை என்பதனால் கோல்டு உறுப்பினராக சேராதவர்கள், மிக அதிகம். அதிலும், டேட்டா என்றி வேலையைக் காட்டிலும் படுகை பணிகள் மிகவும் எளிமையானது என்று சொன்னாலும் கேளாதவர்கள் அதிகம். சரி, பராவாயில்லை.
இதுநாள் வரையில், என் வழியில் எல்லோரையும் அழைத்துச் செல்ல விரும்பினேன். ஆனால், எல்லோரும் நாங்கள் விரும்பும் படி அழைத்துச் சென்றால் தானே வர முடியும், என்று சொல்லாமல் சொல்கிறார்கள்... தாம் விரும்புவது எதுவென்றே தெரியாமல். ஆகையால் நானும் உங்கள் வழியிலேயே வருகிறேன், அதற்காக பதிவிடுவது நானாக இருந்தாலும் "படுகை" என்று சொல்வதற்கு முன்னர், கொஞ்சம் யோசித்துக் கொள்ளுங்கள், சரிங்களா.
ஆன்லைன் Data Entry வேலை
ஆன்லைனில் டேட்டா என்றி வேலை தேடுபவர்கள், எந்த அளவுக்கு டைப் ரைட்டிங்க் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில், வசதி வாய்ப்பு குறைந்தவர்களே அதிகமாக வேறு எந்த வேலை வாய்ப்பு படிப்பையும் படிக்க முடியாமல், டைப் ரைட்டிங்க் படித்தால் வேலை கிடைக்கும் என்று +2 உடன், குறைந்த செலவிலான டைப் ரைட்டிங்க் கற்றுக் கொள்கிறார்கள். மற்றப்படி, வீட்டில் கணிணி & இண்டர்நெட் வசதி வாய்ப்புள்ளவர்கள் அதிகம் டைப் ரைட்டிங்க் கற்றிருக்கிறார்களா? என்றால் கொஞ்சம் எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. சரி, பரவாயில்லை.
காசா? பணமா? இலவசம் தானே!!
காசா பணமா? இலவசம் தானே! ஆகையால், Data entry job, Captcha Data entry வேலை என்று மேலும் மேலும் அழைவதைக் காட்டிலும், நமது டைப் ரைட்டிங்க் திறமைகள் என்ன என்றும், எவ்வளவு சம்பாதிக்க முடிகிறது என்றும், நாம் பரிசோதித்துவிடுவோம். ஏனென்றால், அப்பொழுது தானே இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று ஓடாமல், உட்கார்ந்து வேலை செய்ய முடியும்!
சரி, இலவசம் என்று கணக்கினைத் தொடங்கியாற்றி, அடுத்து என்ன செய்வது?. இடப்பக்கம் இருக்கும் Solved Images என்பதன் மீது ஒர் கிளிக் செய்யுங்கள். இப்பொழுது பக்கத்தின் நடுவில், ஒர் சின்ன இமேஜ் உருவாகும். அதிலிருக்கும் எழுத்துக்களை அப்படியே கீழிருக்கும் பாக்ஸில் டைப் செய்துவிட்டு, Submit என்பதன் மீது கிளிக் செய்ய வேண்டும், Enter என டைப் செய்யக்கூடாது. மேலும், ஒர் இமேஜில் உள்ள எழுத்துக்களை டைப் செய்ய 15 செகண்ட் தான் நேரம். அதற்குள் முடித்து சப்மிட் கிளிக் செய்துவிட வேண்டும். இல்லாவிடில் Kicked out என்ற வார்னிங்க் மெசேஜ் வரும். சாதரணமாக டைப் ரைட்டிங்க் லோயர் கற்றவர்களோ அல்லது, கீ போர்டு நாலேஜ் உள்ளவர்களுக்கோ, 15 செகண்ட் என்பது போதுமான ஒன்றுதான். அப்படியில்லாமல் கீ போர்டில் a எங்கே? u எங்கே? என்று தேடிப்பிடித்து டைப் அடிப்போர் என்றால் 15 செகண்ட் என்பது கடந்துவிடும் என நான் நினைக்கிறேன். இல்லை நான் வேகமாக கண்டுபிடித்து 10 எழுத்துக்களை டைப் செய்துவிடுவேன் என்றாலும் இதனை முயற்சிக்கலாம்.
இமேஜில் தெரியும் ஆங்கில எழுத்துக்கள் சுமால் லெட்டரில் இருந்தால் சுமால் லெட்டராகவும், கேபிட்டல் லெட்டரில் இருந்தால் கேப்சிலும் டைப் செய்ய வேண்டும், இடையில் எண்களும் வரும். பெரும்பாலும் ஒவ்வொரு இமேஜும் இரண்டு வார்த்தைகளைக் கொண்டே வரும், அப்படியிருந்தால் இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே ஸ்பேஸ் விட்டு டைப் செய்ய வேண்டும். அல்லது ஒரே வார்த்தையாகக் கூட வரலாம். சில நேரம் கேப்ஸ் லெட்டர் & எண்கள் கொண்ட ஒரே வார்த்தை கேப்விட்டு கேப்விட்டு வரலாம். அப்படி வருகையில் நீங்கள் ஸ்பேஸ் விடாமல் ஒரே வார்த்தையாக டைப் செய்ய வேண்டும்.
சில நேரங்களில், வார்த்தைக்குப் பின்னே தெளிவற்ற வார்த்தைகள், பாதி மட்டுமே தெரிந்த வார்த்தைகள் என இமேஜ் ஒழுங்கற்று தெரியலாம். அவ்வாறன இமேஜில், தெளிவான எழுத்துக்களை மட்டும் டைப் செய்ய வேண்டும்.
சிலே எழுத்துக்களை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அருகிலிருக்கும் Skip பட்டனை உபயோகப்படுத்தி, அடுத்த இமேஜ்க்கு போகலாம். ஆனால், கிக்டு என்ற வார்னிங்க் வரும். அதைப்போல் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் பொழுது ஒய்வுக்காக pause என்ற வலப்பக்கம் இருக்கும் பட்டனை பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தும் பொழுதும் கிக்டு என்ற வார்னிங்க் வரும். இவ்வாறக அதிக கிக்டு வார்னிங்க் வந்து கொண்டே இருந்தால், உங்களது கணக்கு முடக்கப்படும் என்று சொல்கிறார்கள். ஆகையால், குறிப்பிட்ட நேரத்திற்குள் டைப் செய்துவிட வேண்டும். அதற்காக தவறாக டைப் செய்து சப்மிட் கொடுத்துவிடக் கூடாது. அதிகமான தவறுகள் வந்தாலும் உங்களது கணக்கு முடக்கப்படும். தவறாக நீங்கள் டைப் செய்தவை எல்லாம், profile & payment process என்ற இடத்தில் பார்க்கலாம். சில நேரம், வேலை முடித்துவிட்டுச் செல்லும் பொழுது 1 $ இருந்தது, இப்பொழுது வந்து பார்த்தால் 1/2 டாலர் தான் இருக்கிறது என்று அய்யோ என்றால், அது உங்களது தவறான டைப் ரைட்டிங்காக கழிக்கப்பட்டிருக்கலாம். ஆகையால் தொடர்ந்து சரியாக முயற்சித்து, பணத்தினைப் பெற பாருங்கள். அப்படி சரியாகச் செய்தும் குறைவது போல், மீண்டும் மீண்டும் நடப்பதன் மூலம் அறிந்தால், இங்கு எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஒர் மணி நேரத்தில் 1000 வார்த்தைகள் எளிமையாக டைப் செய்யலாம் என்று டைப் ரைட்டிங்க் செய்பவர்கள் சொல்கிறார்கள். அப்படியானால், 8 மணி நேரத்தில் 5 - 7 டாலர் சம்பாதிக்கலாம். ஒர் மாதத்தில் 7500 - 11,000 ரூபாய் அல்லது அதற்கு மேலும் நீங்கள் சம்பாதிக்கலாம். நீங்கள் சம்பாதித்த பணத்தினை காசோலையாகவோ! உங்கள் கணக்கிற்கு நேரடியாக டெபிட் கார்டு மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
பேமண்ட் 2 வாரத்திற்கு ஒர்முறை அல்லது 15 நாட்களுக்கு ஒர்முறை வழங்குப்படுகிறது. அதற்குள் குறைந்தப்பற்றத் தொகையான $.3 உங்கள் கணக்கில் இருந்தால் 2 நாட்களுக்குள், வங்கிக்கு அனுப்புவதாக சொல்கிறார்கள்.
0 comments:
Post a Comment